மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்
தலைமைச் செயலகம்
*பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றதற்கு நன்றி*
வணக்கம்
சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற உறுதிமொழிக்கு ஏற்ப முதலமைச்சர் அவர்கள் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தார்.
அதன்படியே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2012 ஆண்டு முதல் 2021 ஆம் அண்டு வரை பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளை ரத்து செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
தந்தை வழியில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பான அரசு என்பதை மீண்டும் ஒருமுறை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிருபித்துள்ளார்
முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் பாரட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது
நன்றி
இங்ஙனம்
மிதார் மைதீன்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம்
.