*நூற்றாண்டு விழா நாயகனுக்கு வாழ்த்துக்கள்*
பாரம்பரியமிக்க ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக சட்டப்பேரவைக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாடும் பெருமை கிடைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது
சரியான தருணத்தில், தேடி வந்த பதவியை மிக சிறப்பாக கையாண்டு இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் கூட இப்படி ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு கிடைத்ததை பாராட்டியும் , போற்றியும் வாழ்த்துகிறது.
எத்தனை முதலமைச்சருக்கும் கிடைக்காத பாக்கியம் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வாய்ப்பு கிடைக்க பெற்றதை எண்ணும் போது நூற்றாண்டு விழா நாயகன் பட்டம் பெற இயற்கை அன்னை சரிவர கொடுத்த வரம் என்பது உறுதியாகி விட்டது
இந்த பெருமைக்கு மேலாக வரலாற்று மிக்க சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டிருப்பது தமிழகம் தோன்றியதற்கான பலனை நிறைவு செய்துள்ளது
மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள் கரங்களால் கலைஞர் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைக்க காரணமாகவும், நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு பத்தரிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் பாரட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது
மிதார் மைதீன்
பொது செயலாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம்
செல் : 9003020511