சினிமாசெய்திகள்

ஶ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று..

ஆகஸ்ட் 13, வரலாற்றில் இன்று.

https://youtube.com/shorts/kl3ne1Ib5N4?feature=share

பிரபல நடிகை ஸ்ரீதேவி பிறந்த தினம் இன்று.

சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன், ராஜேஸ்வரி தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி.

கறுப்பு வெள்ளைக் காலத்தில், 4 வயதுச் சிறுமியாகத் தமிழ்க் கடவுள் முருகன் வேடத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக துணைவன் படத்தில் 1969 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

ஸ்ரீதேவிக்கு மீண்டும் பல படங்களில் முருகன் வேடம் கிடைத்தாலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் விதவிதமாக குழந்தை கதாபாத்திரங்கள் கிடைத்தன. அவற்றில் 1971இல் பி.கே.பொற்றேகாட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான பூம்பட்டா என்ற படம், சிறுமி ஸ்ரீதேவியை பிறவிக் கலைஞராக அடையாளம் காட்டியது. அதில் சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளாகி மீளும் சாரதா என்ற சிறுமியாக முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை 8 வயதில் வென்றார்.

குழந்தை நட்சத்திரமாக புகழ்பெற்றுவிட்டாலும் குமரியானதும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற உந்துதல் சாவித்திரியை பார்த்தே உருவானது எனக் கூறும் ஸ்ரீதேவி, தனது 12 வயதில், சேதுமாதவன் இந்தியில் இயக்கிய ஜூலிபடத்தில் அறிமுகமாகி, கதாநாயகியின் தங்கையாக நடித்தார்.

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தனது ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகியாக அறிமுப்படுத்தினார். 16 வயதினிலே மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்துக்

கொண்டது.

மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ஸ்ரீதேவி.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அவர் கடைசியாக புலி என்ற தமிழ் படத்தில் நடித்தார். தனது கணவரின் தயாரிப்பில் மாம் என்ற திரைப்படத்தில் நடித்தார் ஸ்ரீதேவி.

பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி,

2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் நாள்

துபாயில் மாரடைப்பால் காலமானார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button