தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற போதை வஸ்துகளை வெளிமாநிலங்களில் இருந்து வேன் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வந்து பல்வேறு ஊர்களுக்கு சப்ளை செய்வதாக ஊத்துமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத்தொடர்ந்து போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த ஒரு வேனை மடக்கி பிடித்து அதை சோதனை செய்தனர் அதில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பான் குட்கா போன்ற போதை வஸ்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர் கேரளா மாநிலத்தில் இருந்து புளியரை செங்கோட்டை குற்றாலம் வழியாக நடத்திவரும் குட்கா பான் குற்றவாளிகளை ஏற்கனவே குற்றாலத்தில் இருக்கும் பொழுது ஆய்வாளர் சுரேஷ் அதிக அளவில் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது





