தமிழக அரசை பாராட்டிய அண்ணாமலை!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிறுவன் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சமும், சிகிச்சை பெற்று வருவபர்களுக்கு ஒரு லட்சம் தமிழக அரசு அறிவித்துள்ளது.இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சை பெற்றவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சங்கராபுரத்தில் பட்டாசு கடை தீ விபத்தில் பாதிக்கப்பட்டோரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.இந்த துயரமான சம்பவத்தில் இருந்து மீண்டு வருவோம் என்கின்ற அவர்களுடைய நம்பிக்கையால் ஆறுதல் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு ஆத்மாக்களும் சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். மேல் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை தமிழக பாஜக செய்யும் என்று உறுதியளித்து இருக்கின்றேன்.மேலும், மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட்டதற்கும், துரிதமாக நடவடிக்கை எடுத்து உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்திக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழகஅரசு #முகஸ்டாலின் #அண்ணாமலை #தீவிபத்து #Tamilnadu #Mkstalin #Annamalai