கார் உதிரிபாகங்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ! வானை முட்டும் புகை!
கோவையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் வானை முட்டும் அளவுக்கு புகை வெளியேறியதால் பரப்பரப்பு நிலவியது.கோவை, ராமநாதபுரம் அடுத்த ஸ்ரீபதி நகரில் மார்ட்டின் என்பவருக்குச் சொந்தமான கார் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது.இந்நிலையில் இன்று மதியம் திடீரென எதிர்பாராத விதமாக குடோனில் இருந்து தீ பற்றி மளமள வென குடோன் முழுவதும் பரவியது.இதனால் வானை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் காருக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இருப்பதால் தீ கட்டுக்கு அடங்காமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வருகிறது. மேலும் இந்த விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள் மற்றும் உதிரிபாகங்கள் சாம்பலாகின. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ராமநாதபுரம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கோவை #தீவிபத்து #கார்குடோன் #FireAccident #Kovai #CarFactory