கோவை – திருப்பதி மற்றும் கோவா விமான சேவை டிசம்பர் முதல் தொடக்கம்!!
கோவையிலிருந்து திருப்பதி மற்றும் கோவாவிற்குத் தினசரி விமானச் சேவையை ‘இண்டிகோ’ டிசம்பர் முதல் தொடங்குகிறது. ஏற்கனவே அக்டோபர் 31 முதல் அறிவிக்கப்பட்ட கோவை – கோவா இடையிலான விமானச் சேவை டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’கோவிட்-19′ தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு, கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. தற்போது தினமும் 17-முதல் 20-விமானங்கள் இயக்கப்படுகின்றன.உள்நாட்டுப் போக்குவரத்து பிரிவில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு நேரடி விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன.இவை தவிரப் பெங்களூரு வழியாக அகமதாபாத், பரோடா, சென்னை வழியாக கவுகாத்தி போன்ற பல்வேறு நகரங்களுக்கும் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், ‘இண்டிகோ’ ஏர்லைன்ஸ் நிறுவனம், கோவை – திருப்பதி இடையேயும், கோவை – கோவா இடையேயும், டிச., முதல் புதிய சேவைகளைத் துவக்குவதாக அறிவித்துள்ளது.டிசம்பர் 1- முதல் கோவாவுக்கு சேவை வழங்கப்படும் எனவும், கோயம்புத்தூரிலிருந்து அதிகாலை 1:45-மணிக்கு புறப்படும் விமானம், அதிகாலை 3:05-மணிக்கு கோவா சென்றடையும் எனவும், அதற்கு பதில் கோவாவிலிருந்து அதிகாலை 3:35-மணிக்கு புறப்படும் விமானம், அதிகாலை 5:05-மணிக்கு கோவை சென்றடையும்.திருப்பதிக்கு டிசம்பர் 16-ம் தேதி முதல் சேவை தொடங்கும் என்றும், திருப்பதியிலிருந்து மாலை 5:00 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 6:20-மணிக்குக் கோவை சென்றடையும் எனவும், மீண்டும் கோவையிலிருந்து மாலை 6:40-மணிக்குப் புறப்படும் விமானம், இரவு 8:00-மணிக்குத் திருப்பதி சென்றடையும். இந்த இரண்டு சேவைகளும் தினசரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கோயம்புத்தூரிலிருந்து புதிய சேவைகள் தொடங்குவது உறுதி என்றும், முன்னதாக கோயம்புத்தூர் மற்றும் கோவா இடையேயான சேவை அக்டோபர் 31-ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தநிலையில், இது டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள் : கார்த்திக் பாலாஜி , கோவை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கோவை #விமானசேவை #திருப்பதி #கோவா #இண்டிகோ #Kovai #Airlines #Thiruppathi #Goa