விதிமீறல்களால் வருவாய் இழப்புவாடகை கார் ஓட்டுனர்கள் குமுறல்பொள்ளாச்சியின் சுற்றுவட்டார பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் வாகனங்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாடகை கார் ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.புகார் குறித்து வாடகை கார் உரிமையாளர்கள் கூறுகையில் பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயங்கி வருகின்றன. கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் வாடகை கார்கள் திரும்பிச் செல்லும்போது மிக குறைந்த கட்டணத்தில் வாடகை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு வாடகை எடுக்க கூடாது என நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ள நிலையிலும் இந்த விதி மீறல் தொடர்கிறது.இதனால் இங்குள்ள வாடகை கார்களுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வாடகை கார்களை இயக்க ஆண்டொன்றுக்கு டாக்ஸ், பர்மிட், எப்சி, இன்சூரன்ஸ் என சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் இங்கு பலர் செலவுகள் எதுவும் இன்றி சொந்த கார்களை வாடகைக்கு இயக்கி வருகின்றனர்.இதுபோன்ற விதிமீறல்களை தடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.தவறும் பட்சத்தில் எங்களது கார்களை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
செய்திகள் : ஜெகன், பொள்ளாச்சி
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பொள்ளாச்சி #தமிழ்நாடு #வாடகைகார்ஓட்டுனர்