தீபாவளி பட்டாசு வெடிக்க நேரம் வெளியீடு!!
சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என்று, சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.வரும் நவம்பர் மாதம் ௪ ஆம் தேதி தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிக் கடைகள், இனிப்பு, பட்டாசுக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது.இந்த வருடம் தீபாவளிப் பண்டிகையை விமரிசையாக மக்கள் கொண்டாட முடிவெடுத்துவிட்டார்கள் என்பதை இது உணர்த்துகிறது. அதே சமயத்தி இது கொரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.இந்நிலையில், இன்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,* சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம்.* நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.* தீபாவளி பண்டிகை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.* பேருந்துகளில் பட்டாசு எடுத்துச் சென்றால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 683 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 383 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தியாகராய நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும்” என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்