
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவராக திமுக நாகை மாவட்ட பொறுப்பாளர் கெளதமன் முதல்வர் முன்னிலையில் நேற்று பொறுப்பேற்றார். இந்த நிலையில் சொந்த ஊர் திரும்பிய அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக நாகை மாவட்ட எல்லையில் தமிழ்நாடு மீன்வளர்சி கழகத்தின் தலைவர் கௌதமனை நாகை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் தலைவர் ராஜேஷ் , பார்த்தீபன்,ரஜினிகன்ணன் , ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து நாகை வந்த அவர், புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மாநில எல்லையில் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் வரவேற்றனர்.
