ஜெய்பீம் மூடிக்கிடந்த கல்மனங்களை பேச வைத்திருக்கிறது!! இயக்குனர் தங்கர் பச்சான் புகழாரம்!!
சூர்யா நடித்து தயாரித்திருக்கும் படம் ஜெய் பீம். இருளர் இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவை காவல் துறையினர் லாக்கப்பில் வைத்து கொலை செய்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது.
படத்தை பார்த்த அனைவரும் படத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் வெளிவரவில்லை.
இந்நிலையில் இயக்குநர் தங்கர் பச்சான் தனது வெளிப்பாட்டை பகிர்ந்துகொண்டார். அதில் கூறியதாவது,
ஜெய்பீம் மூடிக்கிடந்த கல்மனங்களை பேச வைத்திருக்கிறது;
சூர்யா பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இப்படத்தை தலைநிமிர்ந்து தங்கள் தலைமுறையினரிடம் பெருமையுடன் கூறிக்கொள்வார்கள், கலை மக்களுக்கானது, அதை ஜெய்பீம் சாதித்திருக்கிறது”
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ஜெய்பீம் #தங்கர்பச்சான் #Jaibheem #ThangarPachchan #surya #சூர்யா #2DEntertainment