
என்னங்க சொல்றீங்க!! 1ரூபாய்க்கு தோசையா?? ரஜினி ரசிகர்னா சும்மாவா!!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியானதை ஒட்டி, திருச்சி ராம்ஜி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரு ரூபாய்க்கு தோசை விற்பனை செய்யப்படுகிறது.திருச்சி மாவட்டம் கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் கர்ணன். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர், ராம்ஜி நகர் பகுதியில் அண்ணாமலை என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியானதால் அது தொடர்பான கொண்டாட்டத்தில் கர்ணன் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில், தனது ஹோட்டல் முழுவதும் ‘அண்ணாத்த’ பட போஸ்டர்களை ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு உணவு விலையில் சலுகைகள் அளித்திருக்கிறார். வழக்கமாக தனது கடையில் 20 ரூபாய்க்கு விற்கப்படும் தோசையை இன்று ஒரு நாள் மட்டும் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.இதுமட்டுமல்லாமல், ஆனியன் தோசை, ரவா தோசை வரிசையில் ‘அண்ணாத்த’ தோசை என்ற புதிய தோசை வகையையும் தனது ஹோட்டல் மெனுவில் சேர்த்துள்ளார்.