மொட்டை அடிப்பவர்களுக்கே மொட்டை அடித்த அரசு!! போராட்டத்தில் மொட்டை அடிப்பவர்கள்!!!
பழனி முருகன் கோயிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள், 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி, கோரிக்கை சின்னம் அணிந்து வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கோயில்களில் மொட்டை அடிப்பதற்கான கட்டணம் பெறுவதை ரத்து செய்து கடந்த கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. மேலும் மொட்டையடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த 2 மாதங்களாக ஊக்கத் தொகை வழங்கவில்லை எனக்கூறி, பழனி தண்டாயுதபாணி கோயிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் 330 பேர் போராட்டத்தில் இறங்கினர். மேலும் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊக்கத் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், மொட்டை அடிக்கும் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்றும் அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வாரிசு அடிப்படை உரிமை மாற்றம் செய்ததை தாமதமின்றி வழங்க வேண்டும். பண்டிகை கால கருணைத் தொகை ரூ.5000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து முடிவெடுக்கும் பணியாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேட்ச் அணிந்து பக்தர்களுக்கு மொட்டை அடித்தனர்.
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்காக திருஆவினன்குடி, கிரிவீதி, சண்முகநதி உள்ளிட்ட இடங்களில் முடி காணிக்கை நிலையங்கள் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழகஅரசு #மொட்டைஅடிப்பவர்