காதல் தகராறு : ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு கத்திக்குத்து…
திண்டுக்கல்லில் காதல் தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மகன்கன் என மூன்று நபர்களுக்கு கத்திக்குத்து,
திண்டுக்கல் ஜின்னா நகரைச் சேர்ந்தவர் முகமது தாஹா, இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.இதனால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் முஹம்மது தாஹாவை அழைத்து நேற்று கண்டித்த போது தகராறு ஏற்பட்டு உள்ளது, மேலும் அப்பகுதி இளைஞர்கள் முகமது தாஹாவை தாக்கி உள்ளனர், இதனை அறிந்த முஹம்மது தாஹா வின் தந்தை சாதிக்பாட்ஷா, தாஹாவின் அண்ணன் ரபீக் ஆகியோர்தகராறு செய்த நபர்களிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் எதற்காக என் மகனே அடித்தீர்கள் என கேட்ட போது அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது, இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர், இதில் முகமது தாஹாவின் தந்தை சாதிக் பாட்சாவின் இடது கைவிரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், இதுகுறித்து நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர், இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #க்ரைம் #காதல்_தகராறு #கத்திக்குத்து #திண்டுக்கல் #தமிழ்நாடு #TamilNadu #Dindukal #Crime