திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் வாலிபர் கழுத்தறுத்து கொலை!!
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மதுரை மேலூரை சேர்ந்த அம்பலம் மகன் அர்ஜுனன்(35), மதுரை ஆரப்பாளையத்தில் சேர்ந்த பாபு மகன் பிரான்சிஸ் அன்பரசன்,20. இருவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று காலை முதல் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மதுபோதையில் சுற்றி திரிந்தனர். இருவரும் கஞ்சா அருந்தும் பழக்கம் உள்ளதாகவும் தெரிகிறது. போதை தலைக்கேறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இன்று அதிகாலையில் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் அன்பரசு அர்ஜுனன் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதைப் பார்த்த பயணிகள் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நகர் வடக்கு காவல் ஆய்வாளர் உலகநாதன் மற்றும் காவலர்கள் பிரான்சிஸ் அன்பரசை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை செய்கிறார்கள். இந்நிலையில் சம்பவ இடத்தில் திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் ஆய்வு செய்தார்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #crime #Dindukal #BusStand #திண்டுக்கல் #க்ரைம் #தமிழ்நாடு #TamilNadu