பழனியருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.அவர்களகடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட முயல்கள் காட்டுக்குள் விடுவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சுகமா நாயக்கன்பட்டி பகுதியில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் இருந்த பையில் முயல்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இருவரும் பெத்தநாயக்கன் பட்டியை சேர்ந்த சின்னத்துரை, ஜெகநாதன் என்பதும், இவர்கள் இருவரும் சுகமா நாயக்கன்பட்டி பகுதியில் முயல்களை வேட்டையாடியதும் தெரியவந்தது.தொடர்ந்து அவர்களை கைது செய்த வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட முயல்களை வனப்பகுதியில் கொண்டுவிட்டனர். மேலும் வேட்டையாடிய இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #முயல் #முயல்வேட்டை #பழனி #Rabbit #RabbitHunt #Palani