
“விஜய்சேதுபதியை உதைத்தால் ரொக்கம் : ஒரு உதைக்கு ரூ.1001” – இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்
தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பெங்களூருவிற்கு சென்றிருந்தார்.
அப்போது அவரின் உதவியாளர் மீது ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தார். இது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஜய் சேதுபதியை உதவியாளரை எட்டி உதைத்தவர் யூட்யுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் விஜய் சேதுபதியுடன் பேசும் போது முத்துராமலிங்க தேவரை அவமதித்து பேசியதாகவும் அப்படி பேசவேண்டாம் என தான் அவரை கண்டித்த போது அவருடைய ஆட்கள் தன்னை தாக்கியதால் தான் அப்படி நடந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து, இந்து மக்கள் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1,001 வழங்கப்படும் என அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு ஒரு உதைக்கு 1001 வழங்கப்படும்” என பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவுக்கு ஆதராகவும் எதிராகவும் பல கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது வரை விஜய் சேதுபதி எந்த விளக்கமும் அளிக்காததால் விஜய் சேதுபதிக்கு இந்த எச்சரிக்கை ….!!!! https://t.co/DCqu7Aye4v
— Indu Makkal Katchi (Offl) 🇮🇳 (@Indumakalktchi) November 7, 2021
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பெங்களூர் #Bangalore #விமானநிலையம் #விஜய்சேதுபதி #VijaySethupathy #இந்துமக்கள்கட்சி #முத்துராமலிங்கதேவர் #InduMakkalKatchi #MuthuramalingaDevar