சிங்கப் பெண்ணின் சாதனை தொடர முதல்வர் பாராட்டு
பருவமழைக் காலத்துப் பேரிடர் சமயத்தில் மக்களை காக்க அரும்பாடு பட்டு வரும் அரசு நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
பெரு மழையின் போது சென்னை கீழ்பாக்கம் கல்லறையில் மரம் முறிந்து விழுந்ததில் சிக்கித்தவித்த உதயா என்பவரை டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளரான திருமதி. இராஜேஸ்வரி, காப்பாற்ற முயற்சித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உதயாவின் உயிரைக் காக்க அவரை தோளில் தூக்கிக்கொண்டு சுமந்த ஒரு சிங்கப் பெண்ணின் இச்செயல் கண்களில் கண்ணீரை ததும்ப செய்கின்றது. இச்சம்பவத்திற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் சிங்கப் பெண்ணான திருமதி. இராஜேஸ்வரி நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிறந்த தடகள வீராங்கனையாக மட்டுமின்றி, 1992 இல் ஏற்பட்ட கும்பகோணம் மகாமகத்தில் ஏற்பட்ட நெரிசலில் மக்களை காக்க போராடிய சம்பவம் என்றும் நினைவில் நிற்கின்றது. மக்களை காக்க தங்களை அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திய சீருடைப் பணியாளர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பதற்கு ஏற்ப சீருடைப் பணியாளர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் கம்பீரமாகவும் தங்களது சேவைகளை ஆற்றி வருகின்றனர். அவர்களின் சேவை தொடர முதலமைச்சர் தனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate # முதலமைச்சர் ஸ்டாலின் #பேரிடர் மீட்பு #காவல்துறை ஆய்வாளர் #chief minister Stalin #Disaster recovery #police inspector