செய்திகள்

சீர்காழி அருகே கனமழையால் பாதிக்கபட்ட சம்பா பயிர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

சீர்காழி அருகே கனமழையால் பாதிக்கபட்ட சம்பா பயிர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தில் மழைநீர் தேங்கி பாதிக்கபட்ட சம்பா பயிர்களை முதல்வர் ஸ்டலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விவசாயிகள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதூர் கிராமத்தில் கனமழையால் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டிருந்த சம்பா சாகுபடி பயிர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவ மழையால் மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும், மாவட்டத்தில் 41 கால்நடைகள் உயிரிழந்தது குறித்தும், அதே போல் 90 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கபட்டுள்ளது குறித்த புகைபடங்கள் காட்சிபடுத்தபட்டிருந்தது மேலும் பல்வேறு பகுதிகளில் பாதிக்கபட்டிருந்த பயிர்களின் மாதிரிகளும் காட்சிபடுத்தபட்டிருந்தது அனைத்து பாதிப்புகளையும் பார்வையிட்ட முதல்வர் அங்கு காத்திருந்த பொதுமமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.பயிர்கள் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்த முதல்வர் முழுமையாக ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.அதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி அருகே கேசவன் பாளையம் பகுதியில் மழை நீரால் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இடம் பாதிப்புகள் குறித்தும் கோரிக்கை குறித்தும் கேட்டறிந்தார் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை,மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குகிறார்.முதல்வரின் ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு,மெய்யநாதன்,பெரியகருப்பன்,பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,வேளாண்மை துறை மற்றும் வருவிய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

செய்திகள் : ச.ராஜேஷ், மயிலாடுதுறை

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #முகஸ்டாலின் #கனமழை #பயிர்_சேதம் #தமிழ்நாடு #Tamilnadu #MKStalin #HeavyRains

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button