க்ரைம்செய்திகள்

நீதிமன்ற காவலாளி தற்கொலை : காரணத்தை சொன்ன கடிதம்!!

நீதிமன்ற காவலாளி தற்கொலை : காரணத்தை சொன்ன கடிதம்!!

சென்னையில் முக்கிய பகுதிகளில் ஒன்று அம்பத்தூர் ஆகும். அம்பத்தூர் தொழிற்பேட்டை தபால் நிலையம் அருகில் அம்பத்தூர் நீதிமன்றம் இயங்கி வருகிறது.

நீதிமன்றத்தில் காவல்துறையினருடன் சில தனியார் காவலாளிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமை என்றால் நீதிமன்றத்தில் ஆட்கள் நடமாட்டம் மிக மிக குறைவாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் அலுவலக பணிகளும் நடைபெறாது. இந்த நிலையில், சிலர் நேற்று நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றபோது தூக்கில் சடலமாக ஒருவர் தொங்கியுள்ளார். உடனடியாக அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில், அவர் நீதிமன்ற வளாகத்திலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த கோவிந்தசாமி என்று தெரியவந்தது. 58 வயதே ஆன அவர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு அறையிலே தங்கி வந்துள்ளார். சனிக்கிழமை இரவுகூட அவர் பணியில் ஈடுபட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கோவிந்தசாமியின் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், கோவிந்தசாமி இறப்பதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதமொன்றும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், ‘ எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் கடன் ஏற்பட்டது. எனக்கு கடன்தொல்லை அதிகமாக உள்ளது. என்னால் அதை சமாளிக்க முடியவில்லை.

இதனால், தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு யாரும் காரணம் இல்லை. எனது உடலை மனைவி மற்றும் மகனிடம் ஒப்படைக்கவும். மேலும், எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், அவருக்கு முதல்வர் நல்ல வேலை கொடுக்க வேண்டும்.’ இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

நீதிமன்ற வளாகத்திலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த தனியார் காவலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours)

State suicide prevention helpline – 104 (24 hours),

iCall Pychosocial helpline – 022-25521111.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #chennai #ChennaiCourt #Suicide #Security #சென்னை #நீதிமன்றம் #தற்கொலை #காவலாளி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button