விளையாட்டு மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற இளைஞர்கள் கோரிக்கை!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை அகற்றி நாங்கள் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இளைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிராமத்து இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் மனு அளித்து கூறியதாவது:
இளைஞர்களாக சேர்ந்து அங்கு உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியையும் விளையாட்டுகளையும் நடத்தி வந்தோம். பொதுமக்கள் பலர் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மைதானத்தில் அதிகாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். பல பொருட்களைப் போட்டு மைதானத்தில் இளைஞர்களை விளையாடாமல் செய்துள்ளனர் .இதை அகற்றி தருமாறு ஊராட்சித் தலைவரிடம் என்று கேட்டபோது. அவர் தகாத வார்த்தைகளில் திட்டி அனுப்பி விட்டார்.
மன உளைச்சலில் இருக்கும் இளைஞர்கள் விளையாட நேரம் இல்லாமல் பல தகாத செயலில் இறங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இளைஞர்கள் மனம் போன போக்கில் போகாமல் இருக்க விளையாட்டு மைதானத்தை சீரமைத்து மீண்டும் விளையாடுவதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்களுக்கு தந்து உதவ வேண்டும். இதனால் இளைஞர்கள் உடல் பலமாகும். அது மட்டுமல்ல மனதும் எங்களுக்கு வளமாக்கும். நல்ல உள்ளம் எங்களுக்கு கிடைக்கும், என்றனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திண்டுக்கல் #விளையாட்டுமைதானம் #ஆக்கிரமிப்பு #Dindukkal #PlayingGround #Aggression