
பள்ளி மதிய உணவில் பல்லி : 13 குழந்தைகள் மயக்கம் : மருத்துவமனையில் பரபரப்பு!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் அரசு அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியில் மல்லிகா என்பவர் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் இன்று மதியம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியுள்ளார். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 13 குழந்தைகள் மயக்கமடைந்தனர்.
குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மயக்கம் அடைந்த 13 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர்.
பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 13 குழந்தைகளும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயக்கமடைந்த குழந்தைகள் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிகளவில் கூடியதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #பள்ளி #தமிழகபள்ளி #மதியஉணவு #சத்துணவு #Tamilnadu #TamilnaduSchools