தின்பண்டம் திருடியதாக 3 குழந்தைகள் மீது தீவைத்த இரண்டாம் தந்தை!!
நெல்லை மாவட்டத்தில் பேக்கரியில் தின்பண்டம் திருடியதாக 3 குழந்தைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், பணகுடியில் பேக்கரியில் தின்பண்டம் திருடியதாக மூன்று குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி வளர்ப்பு தந்தையே தீ வைத்து இருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியை சேர்ந்த, ஏற்கனவே திருமணம் ஆன அந்தோணிராஜ் – சுஜா இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்துகொண்டு, காவல்கிணறு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி வந்துள்ளனர்.
இவர்கள் இருவருமே ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சுஜா என்பவருக்கு முதல் திருமணத்தில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களும் அந்தோணிராஜ் – சுதா தம்பதிகளிடம் ஒன்றாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில், குழந்தைகள் மூவரும் தின்பண்டங்களை திருடியதாக, அங்குள்ள ஊழியர்கள் கண்டித்து அவர்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து பேக்கரியின் ஊழியர் ஒருவர் அந்தோணிராஜ்க்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அறிந்த அந்தோணிராஜ் வீட்டிற்கு வந்து அந்த மூன்று குழந்தைகளையும் மன்னனை ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார்.
இதில் மாதேஷ் மற்றும் மகராசி தப்பித்து விட்டனர். மகேஸ்வரி மட்டும் தீயில் சிக்கி படுகாயமடைந்தார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சமத்துவம் அறிந்த போலீசார், அந்தோணிராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்தோணிராஜ்கும் தீ விபத்து ஏற்பட்ட அவர் சிகிச்சை பெறுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.