பட்டப்பகலில் மர்ம நபர்கள் வெறிச்செயல் : டிரைவர் வெட்டிகொலை!!
தூத்துக்குடியில் பெண் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டப்பகலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி செல்சினி காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சாரதி என்கிற பார்த்த சாரதி (35). ஆட்டோ டிரைவர். இன்று மதியம் 3 மணியளவில் அவரது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 2பேர் அவரிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பெண் விவகாரத்தில இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பார்த்த சாரதியின் நண்பர் பன்னீர் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனை அவரது கணவர் கண்டித்துள்ளார்.
இந்த தகராறில் பார்த்தசாரதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தை டிஎஸ்பி கணேஷ் பார்வையிட்டார்.
செய்திகள் : மாரி ராஜ், தூத்துக்குடி