
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் தீ. பாண்டியன் தலைமையில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் விசிக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.