2 நாள் பயணமாக குமரிக்கு நாளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகைநாளை (புதன்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வர உள்ளார். பின்னர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் பகவதி அம்மன் கோவில், ராமாயண சித்திரகூடம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.இதனை தொடர்ந்து 25-ந்தேதி மாலை அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார். கவர்னரின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு
ஆர்.என்.ரவி
முதல் முறையாக கன்னியாகுமரிக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதுகாப்பு பணி தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.