நாயை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட பேரூராட்சி ஊழியர்!! யாரு மேல தப்பு?? படித்து சொல்லுங்க!!
பேரூராட்சி ஊழியர் ஒருவர் இரும்புக் கம்பியால் நாயை அடித்துக் கொன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பரமக்குடி செல்லும் சாலையோரம் ஒரு வீட்டில் நாய் ஒன்று உள்ளது. முதுகுளத்தூர் பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இரும்புக் கம்பியால் அந்த நாயை தனது முழு பலத்தையும் காெண்டு அதனை தாக்குகிறார்.
இதில் அந்த நாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விசாரணையில், அடித்துக் கொல்லபட்ட நாய், சாலையில் செல்வோரை கடித்ததால் அதன் உரிமையாளர் நாயை அடித்துக் கொல்லச் சொன்னதாக தெரியவந்தது.
இதனால் பேரூராட்சி ஊழியர் இரும்புக் கம்பியால் நாயை அடித்துக் கொன்றுள்ளார். எனினும் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் நாயை அடித்து கொல்ல கூறிய நாயின் உரிமையாளர் மீதும் தாக்குதல் நடத்தியவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பலரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.