தக்காளியை பாதுகாக்க 10000 சம்பளத்தில் வேலை ! பரபரப்பு வேலைவாய்ப்பு போஸ்டர்!!
தக்காளி, கேஸ் சிலிண்டரை பாதுகாக்க ஆட்கள் தேவை என்றும், 10,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் எனவும் தொப்பி வாப்பா பிரியாணி கடை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது .
ஆந்திரா , கர்நாடகா , கேரளா ஆகிய மாநிலங்களில் இரண்டு வாரங்களாக பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு தக்காளி வரத்து குறைந்து ஒரு கிலோ ரூ .150 க்கு மேல் விற்கப்பட்டது . பின்னர் , மாநிலங்களில் மழை குறைந்ததை அடுத்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது .தற்போது ரூ .40 வரை தக்காளி விலை குறைந்துள்ளது .
இருப்பினும் தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தக்காளி விலை உயருமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது .அதேபோல் , மத்திய அரசு தொடர்ச்சியாக சிலிண்டர் விலையை உயர்ந்து வருகிறது . இதனால் வர்த்தக சிலிண்டர் விலை ரூ . 2 ஆயிரத்தை நெருங்கிவிட்டது .
இது சிறு நிறுவனங்கள் , கடைகள் , மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .இந்நிலையில் , தக்காளி பெட்டியையும் , கேஸ் சிலிண்டரையும் பாதுகாக்க அனுமதியுடன் துப்பாக்கி வைத்துள்ள security தேவை என தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் செய்துள்ளது .
அந்த விளம்பரத்தில் , தக்காளி பெட்டியையும் , கேஸ் சிலிண்டரையும் பாதுகாக்க license உடன் gun man security guard வேலைக்கு ஆட்கள் தேவை . ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை .
மாத ஊதியம் ரூ .10 ஆயிரம் . தங்கும் இடம் உணவு இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இதையடுத்து தொப்பி வாப்பா பிரியாணி கடையின் இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தை நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர் .