வீரமணி செய்தியாளர்
தென்காசி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த பைன்பொழி கிராமத்தை சேர்ந்தவர் இளம் வயதிலேயே காவல் துறையின் மீது அதிக ஆசையோடு பள்ளியில் பயின்று திருநெல்வேலி கல்லூரியில் பட்டம் பெற்று 2010 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர் இளம் வயதில் இவர் அப்பகுதியில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் சாலையில் சுற்றித் திரிந்த மனநோயாளிகளை அப்போதே தேவையான உணவு உடுத்துவதற்கு ஆடை போன்றவை வழங்கி சம்பந்தப்பட்ட மனநோயாளிகளை காப்பகத்தில் முறையாக சேர்த்து வழிநடத்திச் சென்றவர் . நமது ஊரிலும் என்னை போன்ற காவல்துறையில் எல்லோரும் சேர்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் அதற்கு தேவையான உதவிகளை நான் உங்களுக்கு செய்து தருகிறேன் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்திற்கு காவல்துறை மீது பற்று உள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து முறையான உடற்பயிற்சி மற்றும் காவல் துறைக்கு தேவையான அறிவு சார்ந்த புத்தகங்கள் இவை அனைத்தும் தன்னுடைய சொந்த செலவில் செய்து வந்தார் ஆனால் தென்காசி மாவட்டத்தில் இவர் செய்து வந்த பணியை பார்த்து ஒரு சில அதிகாரிகள் இவரை வேறொரு விதமாக பொய்யான குற்றச்சாட்டை சொல்லி இவரை அரியலூருக்கு பணியிட மாற்றம் செய்தார். அதையும் அப்போதைய தென்மண்டல ஐஜி அவர்கள் அந்த அதிகாரி தகவலின் அடிப்படையில் விசாரிக்காமல் இவரை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றிவிட்டார் இதனால் இன்று தென்காசி மாவட்டத்திற்கு கிடைக்கக்கூடிய புகழ் அரியலூருக்கு சென்றுவிட்டது இன்று வெளியான தமிழ்நாடு காவல்துறை தேர்வு முடிவில் மூலமாக இன்று திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் காவல்துறை வேலை பார்க்கும் சேக் அலிஅவார்கள் தென்காசி மாவட்டம் பண்பொழியை சேர்ந்த காவல் துறையில் பணிபுரியும் அ.சேக் அலி என்பவர் தனது ஓய்வு நேரத்தில் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்று எண்ணுகிற அனைத்து சமுதாய இளைஞர் களை தனது சொந்த முயற்சியில் இலவசமாக படிக்க வைத்து இன்று 20 காவலர்கள் தேர்வின் முடிவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவரை இவர் 40 காவலர்கள் இவரிடமிருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இவர் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் இலவசமாக கொடுக்கிறார். தற்போது அரியலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே தென்காசி மாவட்டம் புளியாரை காவல் நிலையத்தில் பணிபுரிந்தார்.