சுகாதார சீர்கேட்டில் குற்றாலம் : பரிதவிக்கும் ஐயப்ப பக்தர்கள்!!
ஏழைகளின் இன்ப சுற்றுலாத் தலமான ஒன்றும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவின் மிக நெருக்கமாக இருக்கக் கூடிய சுற்றுலா தலம் குற்றாலம் ஆகும்.
ஒரு வருடத்தில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் கார்த்திகை மார்கழி தை போன்ற மாதங்களில் தண்ணீர் அதிகமாக வரும் இதில் கார்த்திகை மாதங்களில் கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை திருத்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் மாலை அணிந்து கடும் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
இதில் ஒரு பகுதியாக குற்றாலத்திற்கு மாலை அணிந்த பக்தர்கள் வருகை தந்து பிரசித்தி பெற்ற குற்றால நாதரையும்இலஞ்சிகுமார்ரை வழிபட்டு தெற்கு கங்கை என்று அழைக்கப்படும் கூடிய புனித அருவியன குற்றாலத்தில் நீராடி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து மீண்டும் குற்றாலத்துக்கு வந்து நீராடி வீட்டிற்கு சிப்ஸ் அல்வா விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை வாங்கி மீண்டும் ஒரு முறையில் திருக்குற்றால நாதரை தரிசனம் செய்து நீராடி செல்லும் வழக்கமாக பன்னெடுங்காலமாக சபரிமலை மாலை அணிந்த பக்தர்கள் தொடர்ச்சியாக இந்து மத நம்பிக்கைகளை கடைபிடித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடமாக கொடிய கொரானா நோயினால் அனைத்து சுற்றுலாத் தலங்களும் அடைக்கப்பட்டது ஆனால் எல்லா சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டது இன்றுவரை குற்றாலம் மட்டும் திறக்கப்படாமல் விதிவிலக்காக இருந்து வருகிறது.
தென்காசி மாவட்டம் தமிழகத்தில் 33வது மாவட்டமாக மாண்புமிகு முன்னாள் முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்கள் திறந்து வைத்த முதல் இன்றுவரை மூன்று மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பேற்று இன்றுவரை குற்றாலத்தை திறப்பதற்கு ஆவணம் செய்யவில்லை 27:11:2021இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆய்வு செய்வந்தார். அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சுற்றுலா தளங்களை திறந்தால் இப்பகுதி எங்களுடைய வாழ்வாதாரங்கள் சிறப்பாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியரின் ஒற்றை வார்த்தையை நம்பி இப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.
மாவட்டங்களிலிருந்து வெளிமாநிலங்களில் இருந்து முறையாக உடல் பரிசோதனை செய்து கேரளா சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது அரசு அனுமதி படியே குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அருவிக்கரை பகுதியில் குற்றாலம் பேரூராட்சி சார்பாக கழிப்பிட வசதி இருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் அருவிக்கரையில் கார் பார்க்கிங் வரை செல்வதற்கு அண்ணா சிலை அருகே தடுப்பு கம்பிகளை வைத்து அடைக்கப்பட்டிருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் திருக்குற்றாலநாதர் தேவஸ்தான கார் பார்க்கிங் வண்டியை பார்க்கிங் செய்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதில் முதன்மையானது வருகின்ற பக்தர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் இல்லாததால் ஐயப்ப பக்தர்கள் சாலையோரங்களில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் அசுத்தம் செய்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வரை வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளித்தால் அங்கே பேரூராட்சி கட்டண கழிப்பிடம் நிறைய இருப்பதால் இது போன்ற அசுத்தங்கள் கண்ட இடங்களில்தொடராது சுகாதாரமும் பேணி காக்கப்படும் .
எனவே மாவட்ட நிர்வாகம் அண்ணா சிலை அருகே உள்ள தடுப்பு கம்பிகளை அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளையும் சபரிமலை ஐயப்ப பக்தர்களையும் அருவிக்கரை வரை அனுமதிக்க வேண்டும். விரைவில் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்ய பிறகு நல்ல ஒரு செய்தியை இப்பகுதி மக்களுக்கு அளிப்பார் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி வணிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அதன் நம்பிக்கையில் பதிவிடுகிறோம்.
செய்திகள் : வீரமணி, குற்றாலம்