முதல்வர் சொல்வது ஒன்று : ஆளுநர் சொல்லுவது வேறு! எதற்கு??
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (27.11.2021) ஆளுநர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர.என்.ரவி அவர்களை சந்தித்து நீட் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உடன் மாண்புமிகு நீர்வள துறை அமைச்சர் திரு துரைமுருகன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயிர் அலுவலர்கள் இருந்தனர்.
முதல்வர் சொல்வது ஒன்று ஆளுநர் சொல்லுவது வேறு!
நேற்று ஆளுநரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் மழை வெள்ளம் பாதிப்பு நிலவரம் குறித்து பேசியதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.
முதல்வர் சொல்வதும் ஆளுநர் மாளிகை சொல்வதும் வேறாக இருக்கிறது.
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ணா பிரபு, மதுரை