நாளை முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை.. தங்கப்பத்திர விற்பனை..!!
2021 -2022 ஆம் நிதியாண்டுக்கான 8வது கட்ட தங்க பத்திர விற்பனை நாளை தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.மொத்தம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. தங்க பத்திரம் திட்டத்தின் கீழ் தங்கத்தின் விலையை மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது.
அதன்படி இந்த முறை ஒரு கிராமுக்கு ரூ.4,791 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க பத்திரங்களை ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்க பத்திர வெளியீட்டு திட்டத்தில் தனிநபர் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். அதேசமயம் அரசு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ணபிரபு, மதுரை