
*இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சமீரன் அவர்கள் குற்றாலம் பகுதிகளில் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறார்.. தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சுற்றுலா தளமாக விளங்கும் குற்றாலம் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் இப்பகுதி தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிடப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததையடுத்து அங்கு வியாபார நிறுவனங்கள் கடைகள் வியாபாரம் இன்றி இருப்பதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வியாபாரி சங்கங்கள் பொதுமக்கள் குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்ததையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் குற்றாலம் ஐந்தருவி பழைய குற்றாலம் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விசில் செய்தியாளர் திருமுருகன்