திண்டுக்கல் மாவட்டம் மழை நீர் சேமிப்பில் உலக சாதனை புரிந்துள்ளது. உலக சாதனை அமைப்புகள் பாராட்டு தெரிவித்தன.திண்டுக்கல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ், மாவட்ட முழுவதும் 600 மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்டன.இதில் 445 கிராமங்களின் அரசாங்கக் கட்டிடங்கள், அரசுப் பள்ளிகளில் 21 நாட்களில் அதாவது, 30.11.2021-ஆம் தேதிக்குள் 605 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்தப் புதிய முயற்சியை, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (USA – LLC), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளது.21 நாட்களில் பல்வேறு இடங்களில் கட்டிட மேற்கூரை மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்கிய உலக சாதனை செய்தமைக்கு கலெக்டர் விசாகனிடம் நான்கு உலக சாதனை சான்றிதழ், பதக்கமும் வழங்கப்பட்டது. இதேபோல கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமாரிடமும் வழங்கப்பட்டது. சான்றளிக்கும் உலக சாதனை விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன்எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அமீத்ஹிங்க்ரோனி, ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அம்பாசிடர் டாக்டர் செந்தில்குமார், முனைவர் சாந்தாராம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மூத்த சாதனை பதிவு மேலாளர் ஜெகநாதன், ரெக்கார்டு மேலாளர் கார்த்திக் ராஜ், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த பதிவு மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
Read Next
கோக்கு மாக்கு
2 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
2 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
2 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
2 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
2 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
2 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
2 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
2 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
2 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
2 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
2 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
2 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
2 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளி கைது
September 5, 2020
பாதுகாப்பு இல்லாமல் ஆபத்து ஏற்படும் வகையில் டிராக்டரில் கொண்டு செல்லும் மின் கம்பம்
September 26, 2023