இனி “தல” என்று அழைக்கவேண்டாம் – ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!!
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.இந்நிலையில், “ரசிகர்கள் இனிமேல் என்னை தல என்றோ, வேறு ஏதாவது பட்டப் பெயர்களை குறிப்பிட்டோ அழைக்க வேண்டாம்” என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொதுஜன மற்றும் என் உண்மையன ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும்போதோ, என்னைப் பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.தல என்றோ, வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். அன்புடன் அஜித்குமார்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
— Suresh Chandra (@SureshChandraa) December 1, 2021