கூலி உயர்வு வலியுறுத்தி ஜனநாயக கட்டுமான தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்
நலவாரியத்தில் தொழிலாளர்கள் பதிவை எளிமையாக்க வேண்டும், கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை தொழிலாளர் நல அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் இன்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை ஒருங்கிணைந்த தொழிலாளர் நல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை உறுதி செய்யவேண்டும், 60 வயதான நாள்முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், புலம்பெயர்ந்த தொய்லாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பபட்டது.
வேலை இடங்களில் பெண் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
செய்திகள் : ச.ராஜேஷ், நாகை