விவசாயி கோரிக்கை : விவசாயி பாதுகாப்பு சங்கம் உயர் மின் கோபுரங்களில் குடியேறும் போராட்டம்
கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக திருமங்கலத்தில் உள்ள உயர்மின் கோபுரங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது
உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பாக 20க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் செங்கப்படையில் உள்ள உயர் மின் கோபுரத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உயர்மின் கோபுரத்தை அமைக்கக்கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தோம் அதற்கு மின் கம்பிகள் நிலத்துக்கடியில் செல்வதற்காக ஐஐடி நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது,
ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,தற்போதைய தமிழக அரசு 765 கிலோ வாட் கேபிள்களை நிலத்துக்கடியில் செல்லப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தது, அதுவும் தற்போது காற்றில் பறந்து வருகிறது.எனவே தமிழக அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் உயர் மின் கோபுரம் அமைக்க கூடாது எனக்கூறி தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பாக உயர்வின் கோபுரத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கள்ளிக்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் போராட்டக்காரர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
செய்திகள் : நீதிராஜன், மதுரை