
என்ன ஜோக் காட்றிங்களா!!அது நான் இல்லை!! செல்லூர் ராஜூ சசிகலாவுக்கு ஆதரவா??
சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக ஒரு ஆடியோ வெளியான நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை வில்லாபுரத்தைச்சேர்ந்த சக்திவேல் ராஜன் என்பவர் குவைத்திலிருந்து செல்லூர் ராஜுக்கு அலைபேசியில் பேசியதாகவும் , பதிலுக்கு செல்லூர் ராஜு பேசியது போல் அந்த ஆடியோ இருக்கிறது .அதில், அம்மாவுக்கு அடுத்தபடியாக கட்சியில் சின்னம்மா தானே இருந்தாங்க .
உங்களைப் போன்ற சீனியர்கள் எல்லாம் இதை எடுத்துச் சொல்ல வேண்டாமா என்று கேட்க , நாங்களும் அதைத்தான் விரும்புறோம் . அதற்கு முறையாக போகணும் தம்பி என்று செல்லூர் ராஜூ செல்வது போல் இருந்தது.பொறுமையாக செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் மொத்தமாக இழந்து விடுவோம், அதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று செல்லூர் ராஜூ செல்வது போல் இருக்கிறது.
இதற்கு செல்லூர் ராஜூ மறுப்பு தெரிவித்துள்ளார்.அந்த வீடியோவில் பேசியது தாம் அல்ல என கூறியுள்ளார். அதிமுகவினர் ஒற்றுமையாக இருப்பதை தெரிந்து கொண்ட சில சமூக விரோதிகள் வேண்டுமென்றே இப்படி செய்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.எனது குரலில் ஒருவர் பேசி அதை நான் பேசியது போல் வெளியிட்டு தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்துகிறார்கள்.
என் குரலில் இருக்கும் ஒருவரிடம் பேசியது போல் அந்த ஆடியோவில் இருக்கிறது. அதுவும் இரவு ஒரு மணிக்கு பேசியது போல் இருக்கிறது அதுவே முதலில் தவறு என கூறியுள்ளார்.
நகர்ப்புற தேர்தல் வரும் நேரத்தில் இது மாதிரி எல்லாம் நடைபெறுவதால் ஆளுங்கட்சியின் சதியாக கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ள செல்லூர் ராஜூ, இது முழுக்க முழுக்க தவறான செய்தி என விளக்கம் அளித்துள்ளார்.