செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி : அரசாணை வெளியீடு

மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி : அரசாணை வெளியீடு…

மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு சங்கங்களின் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2021-22 ம் ஆண்டு நிதி நிலைஅறிக்கையில் நிலுவையில் இருக்கும் ரூ 2,756 கோடி தள்ளுபடி செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன் படி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வேளாண்மை- நபார்டு ஆகியவற்றின் மூலம் மகளிர்சுய உதவிகுழுக்கள் மூலம் பெற்ற கடன் களின் அபராத வட்டி, இதர செலவினங்கள் தவிர்த்து அசல் தொகையான ரூ.2,459.57 கோடி மற்றும் வட்டி ரூ.215.07 கோடியும் சேர்த்து ரூ.2,674.64 கோடியை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக் கடன்களில் 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த அசல், வட்டி மட்டும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
31.03.2021 அன்று மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் கணக்கில் ‘நிலுவை நாள்’ முதல் ‘தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்படும் நாள்’ வரை அக்குழுவால் கடன்தொகை பகுதியாக செலுத்தப்பட்டு இருப்பின், அத்தொகை போக எஞ்சிய தொகை மட்டும் தள்ளுபடி செய்யப்படும்.
தள்ளுபடி மற்றும் மானியத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டிருப்பின் அரசு மானியம் தவிர்த்து மீதமுள்ள தொகை தள்ளுபடி செய்யப்படும்.

தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிப்பவர்கள் மட்டுமே தள்ளுபடி செய்ய தகுதி உடையவர்கள்.
அவை இல்லாத மற்றும் போலி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ஆதார் எண், பான் KYC விவரங்கள் குடும்ப அட்டை தரவுகள் அளிக்காத மற்றும் தரவுகள் சரியாக இல்லாத கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
31.03.2021 அன்று கடன் நிலுவையாக இருந்து அரசாணை வெளியிடப்படும் நாள் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அத்தொகை முழுவதும் திரும்பச் செலுத்தப்பட்ட கடன்கள், இத்திட்டத்துக்கு தகுதி பெறாதவையாக கருதப்படும்.
கடன் தள்ளுபடி செய்யப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்.
ஏற்கனவே பங்குத் தொகை செலுத்தியிருந்து கடன், தள்ளுபடி செய்யப்படும்பொழுது எக்காரணத்தை முன்னிட்டும் பங்குத் தொகையை திரும்ப வழங்கக் கூடாது.
ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இல்லாமல் பிற மாநிலங்களின் முகவரி கொண்ட ஆதார் அட்டைகள் இருப்பின் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button