தொழில்நுட்பம்

விரைவில் கூகுளின் ஸ்மார்ட் வாட்ச்!!

விரைவில் கூகுளின் ஸ்மார்ட் வாட்ச்!!

கூகுள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கும் முயற்சியில் இருந்து வருகிறது. ஆனால் சில காரணங்களால் வெளியீடு தாமதமானது.

கடந்த 2019-ஆம் ஆண்டு கிடப்பில் போடப்பட்ட தனது ஸ்மார்ட் வாட்ச் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்தது கூகுள். ஆனால் கூகுள் ஹார்டுவேர் நிறுவனர் ரிக் ஆஸ்டர்லோ அறிவிப்பால் அந்த முயற்சியும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கூகுளின் புதிய ஸ்மார் வாட்ச் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வழக்கம் போல இம்முறையும் பிக்சல் வாடிக்கையாளர்களை கூகுள் ஏமாற்ற வாய்ப்பில்லை. ஏனென்றால் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதன் கோட் பெயர் தற்போது கசிந்துள்ளது. ‘ரோஹன்’ என பெயரிடப்பட்டிருக்கும் கூகுள் ஸ்மார்ட் வாட்ச் விவரங்களை பிரபல இன்ஸைடர் என்னும் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

கூகுள் ஸ்மார்ட் வாட்சானது Wear OS 3 என்னும் புதிய இயங்குதளத்துடன் ஸ்மார்ட் வாட்ச் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.Wear OS 3 ஆனது சாம்சங் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். Tizen இயங்குதளத்தை கூகிளின் சொந்தமாக இணைத்தது . Wear OS 3 ஆனது Samsung’s Galaxy Watch 4 இல் மட்டுமே இதுவரையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் களமிறங்குவதற்கு முன்னதாகவே , கூகுள் தனது வாட்சுகளுக்கான இயங்குதளத்தை உருவாக்க தொடங்கி விட்டது. ஆனால் அது சந்தைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே ஆப்பிள் வாட்சுகள் சந்தையில் கோலோச்ச தொடங்கிவிட்டன. என்னதான் சந்தையில் பல ஸ்மார்ட் வாட்சுகள் அறிமுகமானாலும், கூகுளின் பிக்சல் பயனாளர்களுக்கு மட்டும் கூகுள் தொடர்ந்து அதிருப்தி அளித்து வந்தது.

கடந்த பல வருடங்களாக ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்க முயற்சித்த கூகுள் , ஒரு கட்டத்தில் ஸ்மார்ட் வாட்சை உற்பத்தி செய்ய தங்களுக்கு சிறந்த ஊழியர்கள் தேவை என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் ஊடங்கள் ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டை உறுதிப்படுத்தின. ஆனாலும் பிரபல வாட்ச் நிறுவனமான fossil உடன் இணைந்து இவ்வகை வாட்சினை கூகுள் தற்போது தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இரண்டு ஆண்டுகால தொடர் உழைப்புக்கு பின்னர் தற்போது ஸ்மார்ட்வாட்ச் விரைவில் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் எப்படி விளையாட்டுகள் , உடல் நலன்களில் அக்கறை காட்டுகிறதோ அதே போலத்தான் கூகுளும் செயல்படும் என நம்பப்படுகிறது. அலெக்சா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் குரல் கட்டளைகளை ஏற்கும் வகையில் கூகுள் ஸ்மார்ட் வாட்ச் உருவாக்கப்பட்டிருக்கும் என நம்பலாம். பிக்சல் மொபைல் மட்டுமல்லாமல் பிற ஆண்ட்ராய்ட் மொபைலையும் ஆதரிக்கும் வகையிலும் ரோஹன் உருவாக்கப்பட்டிருந்தால் , அது நிச்சயம் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button