விசில் செய்தியாளரின் மனித நேயம் மனதை உருக்கும் செயல்…
தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி நகரில் இன்று காலையில் தாய் குரங்கு ஒன்று தனது குட்டியை அங்கும் இங்குமாக தூக்கி திரிந்து வந்தது.. அப்போது தனது குட்டியை ஒருவரது வீட்டின் வாசலில் வைத்துவிட்டு சென்றது.
பிறகு செங்கோட்டை அரசு போக்குவரத்து துறையில் பணிபுரியும் ராஜேந்திரன் மற்றும் நமது செய்தியாளர் வீரமணி ஆகியோர் அந்த குட்டியை அருகில் சென்று பார்த்தோம், மூச்சுத்திணறல் ஆக இருந்தது, உடனடியாக அந்த குட்டியை லாவகமாக ஒரு பையில் வைத்து இலஞ்சி அருகே வாஞ்சி நகரில் பெட் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் ஜெயபால் ராஜா அவர்களிடம் கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் இரண்டு வகையான மருந்து ஊசிகள் செலுத்தினார்கள். ஏன் இதனால் இந்த குரங்கு எப்படி இருக்கிறது? என்பதை அவரிடம் நமது குழு விவாதித்து போது மருத்துவர், தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் சிறிய குட்டிகளுக்கு குளிர் தாங்காமல் மூச்சு திணறல் ஏற்பட்டு சளித் தொந்தரவால் ஏற்பட்டிருக்கிறது என்ற விவரத்தை குழுவினரிடம் சொன்னார்கள்.
அதற்கு தேவையான முதல் உதவிகளும் மருத்துவர்கள் இலவசமாக செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்களும் அந்த குரங்கு குட்டியை காப்பாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்து வந்தோம். ஆனால் தற்போது வரை அந்த குட்டிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது தான் இருக்கிறது..
போன் மூலமாக தகவலை மறுபடியும் கேட்டோம், லென்ஸ் பாதிப்படைந்துள்ளது என்ற விவரங்களை எங்களுக்கு அளித்தார்.
பிற உயிரையும் தன் உயிர்போல் எண்ணுக என்ற அடிப்படையில் நாங்கள் முயற்சி செய்தும் பலன் இறைவன் கையில்தான் இருக்கிறது…. என நினைத்து காத்திருந்த எங்களுக்கு மிக அதிர்ச்சி!! இறைவனும் கைவிட்டுவிட்டான்!! குரங்கும் உயிரிழந்தது!! இந்த மாதங்களிலே இப்பகுதியில் நான்காவது குட்டி குரங்கு இது போன்ற நிலையில் உயிரிழந்துள்ளது…
வனத்துறையினர் மற்றும் விலங்குகள் நல அமைப்பினரும் கவனம் செலுத்த வேண்டுகிறோம்.
செய்திகள் : வீரமணி, குற்றாலம்