க்ரைம்
Trending

லிஃப்ட் கொடுத்து ஓசூர் மாணவர் படுகொலை…..

லிஃப்ட் கொடுத்து ஓசூர் மாணவர் படுகொலை…..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள வள்ளுவர் நகரில் முனீஸ்வரன் கோவிலின் பின்புறம் அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக ஒசூர் நகர போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது இளைஞரின் தலை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில் ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் பிரதட்டூர் கிராமத்தைச் சார்ந்த மகபூப் பாஷா என்பவரின் மகன் சேக் முகமது அப்சல், தனது தம்பியுடன் ஒசூர் ராம்நகரில் உள்ள தாய்மாமா ஆட்டோ டிரைவர் உசேன் பாஷா வீட்டில் தங்கியிருந்தவர் என விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அப்சலின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டதில், ஷேக் முகமது அப்சல் ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் இரண்டாமாண்டு படித்து வருகிறார். தினமும் நண்பகலுக்கு பிறகு தனியார் தொழிற்சாலையில் இரவு 1 மணி வரை பகுதிநேரமாக வேலை பார்ப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.

கல்லூரி முடித்து தொழிற்சாலைக்கு சென்றவர் காலை முதல் வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் நகர போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் முதற்கட்டமாக வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் திலீப் குமார், ராஜேஷ் என்கின்ற ஸ்டாலின் இவர்களை பிடித்த போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சேக் முகமது அப்சல் மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டு பகுதிநேரமாக தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். வேலை நேரத்தில் தொலை பேசி அனுமதி இல்லை என்பதால் தனது ஷூவில் மறைத்து வைத்து எடுத்து செல்வார். பின்னர் தொலைபேசியை கம்பெனியில் இருந்து வெளியே வரும்போது எடுத்து வந்துள்ளார். இரவு 1 மணியளவில் வேலையை முடிந்தவுடன் பத்தல பள்ளியில் இருந்து ஓசூருக்கு ஒருவரிடம் லிப்ட் கேட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே ஓசூர் பேருந்து நிலையம் வந்ததும் இறங்கிய முகமது ஷேக் நள்ளிரவில் தனியாக வருவதை நோட்டமிட்ட திலிப் குமார், ராஜேஷ் என்கிற ஸ்டாலின் இருவரும் அவர்களின் மோட்டார் சைக்கிளில் முகமது ஷேக்கை அமரவைத்து வள்ளுவர் நகர் கோயில் அருகில் ஷேக்கிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் அவரிடம் பணம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் போது முகமது ஷேக் தலையில் அடிபட்டு இறந்துள்ளார். பின்னர் திலிப் குமார் மற்றும் ராஜேஷ் என்கிற ஸ்டாலின் இருவரும் சேர்ந்து சேக் முகமது கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஓசூர் கல்லூரி மாணவரை கொலை செய்த வழக்கில் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button