க்ரைம்
Trending

5 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொண்ட தாய்…

5 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொண்ட தாய்…

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர், ஷிவ்லால் பஞ்சாரா. இவரது மனைவி பாதம்தேவி ஆவார். இந்த தம்பதிக்கு, 7 பெண் குழந்தைகள் இருந்தனர். தனது கணவருடன் அடிக்கடி வரும் சண்டையால் வருத்தமடைந்த அந்த பெண் ஒருவர் தனது 5 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் வீசி தானும் குதித்ததாகக் கூறப்படுகிறது.

கணவர் உறவினர் வீட்டு துக்கத்திற்கு சென்றிருந்த போது, 6 பேரும் இறந்தனர் என்று போலீசார் நேற்று தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஷிவ்லால் சென்று விட்டார். அப்போது, 1 வயதான மகள் அர்ச்சனா மற்றும் மேலும் 4 பெண் குழந்தைகளை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் துாக்கி வீசிய பாதம்தேவி, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அருகிலுள்ளவர்கள் செய்தியை அறிந்ததும் சென்று பார்த்துள்ளனர், பின்னர் பொதுமக்கள் கொடுத்த தகவலை அறிந்து, கிணற்றில் மிதந்த உடல்களை போலீசார் மீட்டனர். மேலும் இரு மகள்கள் வீட்டில் துாங்கியதால் உயிர் தப்பினர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற 6 உடல்களில் இறந்த பெண் பாதம்தேவி என்றும், 7 பெண்குழந்தைகளின் தாய் என்றும், செச்சாட் காவல் நிலையத்திற்குட்பட்ட கலியாஹெடி கிராமத்தில் உள்ள பஞ்சரோன் கா தேராவில் வசிக்கும் ஷிவ்லால் பஞ்சாராவின் மனைவி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருடன் 14 வயதாகும் சாவித்திரி, 8 வயதாகும் அங்காளி, 6 வயதாகும் காஜல் 4 வயதாகும் குஞ்சன் மற்றும் ஒரு வயது அர்ச்சனா ஆகிய 5 சிறுமிகள் உயிரிழந்தனர். மற்ற இரு மகள்களான 15 வயது காயத்ரி மற்றும் 7 வயது பூனம் ஆகியோர் வீட்டில் பத்திரமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணையில், ஷிவ்லால் போர்வை மற்றும் துணி வியாபாரியாக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு, மற்றொரு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த நிலையில், சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தபோது, ​​அந்த நபர் தனது வீட்டில் இல்லை, என்று கூறினார்.

அந்த கிணறு பெண்ணின் வீட்டிலிருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் உள்ளதாக செசாட் காவல் நிலைய காவல் அதிகாரி ராஜேந்திர மீனா தெரிவித்தார். சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை ஷிவ்லால் வீட்டிற்குத் திரும்பினார், ஆனால் அவரது மனைவி ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று அவர் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை என்று செசாட் காவல் நிலைய காவல் அதிகாரி ராஜேந்திர மீனா தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button