தனியொருவள் : 1.5 வருடம் தலைமறைவு : கோடி ரூபாய் மோசடி : இறுதியில் களி…
பிரபல தனியார் வர்த்தக நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி 87 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்….
சென்னை தியாகராயநகரில் உள்ள மோனர்ச் நெட்வொர்த் கேப்பிட்டல் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டரின் உதவியாளராக பணிபுரிந்து வருவதாக பொய்யாக கூறி அமுதா என்பவர் பப்பியான் என்பவரையும் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் என 23 நபர்களை ஏமாற்றி பங்குசந்தையில் தான் கூறும் நிறுவனங்களில் பங்குகளை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி முதலீடுகள் பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் தன் சொந்த சுயலாபத்திற்காக பணத்தை செலவு செய்து மோசடி செய்துள்ளார்…
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பப்பியான் பிராபகர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடையாறு பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அமுதா என்பவர் அறிமுகமாகி பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி பப்பியான் மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் என கிட்டத்தட்ட 23 நபர்களை ஏமாற்றியுள்ளார்…
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ப்ப்பியான் பிராபகர் புகார் மனுவை அளித்து இருந்தார்… புகாரின் அடிப்படையில் போலீசார் ஒரு வருடத்துக்கும் மேலாக குற்றவாளியை தேடி வந்தனர்…
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வங்கி கணக்கில் 53 லட்சமும், ரொக்கமாக ரூ 34 லட்சமும் என மொத்தம் 87,25,499 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது…மேலும் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த அமுதாவை தனிப்படை போலீசார் மதுரை மாவட்டத்தில் உள்ள வடகரை ஆயில் மில் அருகே வைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்…
87 லட்ச ரூபாயை ஏமாற்றி ஒன்றரை வருடகாலமாக தலைமறைவாக இருந்து வந்த பெண்ணை கைது செய்த காவல் துறையினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்…
செய்திகள் : ஜெயக்குமார், சென்னை