தூத்துக்குடியில் வீட்டின் சாவியை திறந்து 8 பவுன் நகை திருட்டு : தென்பாகம் போலீசார் விசாரணை.
தூத்துக்குடி அண்ணா நகர் 8வது தெருவை சார்ந்தவர் செல்வக்குமார்-தனவெட்சுமி தம்பதியினர். செல்வக்குமார் அண்ணா நகர் 7வது தெருவில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று செல்வக்குமார் வழக்கம் போல் மதியம் சாப்பிட்டு விட்டு கடைக்கு சென்றுள்ளார். அவரின் மனைவி தனலெட்சுமி தனது கணவரின் ஹார்டுவேர் கடை அடுத்த தெருவில் உள்ளதால் எப்பொழுதும் சாவியை வெளிக்கதவு ஓரத்தில் வைத்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இன்று மதியம் இரண்டு தெரு தாண்டியுள்ள தனது அம்மா வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துச்சென்றுள்ளார். அவ்வாறு இன்று சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டு சாவியை எடுத்து கதவைத் திறந்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூபாய் 5 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை வீட்டிற்கு வந்த அவர் வீடு கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் வீசி எறியப்பட்ட அதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது கணவர் செல்வக்குமாருக்கு தகவல் கொடுக்க அவர் தென்பாகம் காவல் நிலையத்திற்கு நடந்த சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் மற்றும் கைரேகை நிபுணர்கள் தொடர்ந்து அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்திகள் : மாரிராஜ், தூத்துக்குடி