
ரஜினிகாந்த் – சசிகலா தீடீர் சந்திப்பு!!
நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரை நேற்று மாலை சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சசிகலா நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, நடிகர் ரஜினிகாந்திற்கு பூங்கொத்து அளித்த சசிகலா சமீபத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து கேட்டறிந்து, ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். பின்னர், சமீபத்தில் அவருக்கு டெல்லியில் மத்திய அரசின் சார்பில் தாதாசோகேப் பால்கே விருதுக்கும் வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடனிருந்தார்.
அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான அறிக்கை வெளியிட்ட சசிகலா, இன்று (7ம் தேதி) யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த் – சசிகலா திடீர் சந்திப்பு இன்றைய அரசியல் சூழலில், மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.