திரையரங்கில் சூரரை போற்று!!
சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் டிசம்பர் 26ம் தேதி கேரளாவில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.
சுதா கொங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த படம் சூரரை போற்று. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக இந்த படம் ஓடிடியில் வெளிவந்தது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் பெற்றுள்ளது.
இந்த படம் ஓடிடியில் வெளியிடப்பட்டதால், அந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்தனர்.இந்நிலையில், கேரளாவில் வருகின்ற 26ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. அதிகாலை 5 மணிக்கு சில திரைப்படங்களில் வெளியிடப்பட உள்ளன.