செய்திகள்
Trending

“உள்ளுருக்கும் எதிரியால் தான் அதிக ஆபத்து” சர்ச்சையை ஏற்படுத்திய சி.டி.ரவி ட்வீட்

“உள்ளுருக்கும் எதிரியால் தான் அதிக ஆபத்து” சர்ச்சையை ஏற்படுத்திய சி.டி.ரவி ட்வீட்…..

வெளியில் இருக்கும் எதிரியைவிட உள்ளுக்குள் இருக்கும் எதிரியால் அதிக ஆபத்து ஏற்படும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி வெளியிட்டுள்ள ட்வீட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் சிகிச்சைப் பலனின்றி, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங், படுகாயங்களுடன் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சூழலில், பாஜக தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”வெளியில் இருக்கும் எதிரியைவிட உள்ளுக்குள் இருக்கும் எதிரியால் அதிக ஆபத்து ஏற்படும். வெளியில் இருக்கும் எதிரியை நீங்கள் அழிக்கலாம். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் எதிரியுடன் நீங்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு ஆளாகி, அவர் உயிரிழந்த நிலையில், சி.டி.ரவியின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கமெண்ட்களில் சமூக வலைதளவாசிகள் தெரிவிக்கிறார்கள்.மேலும் இந்த ட்வீட்டை பாஜகவைச் சேர்ந்த குஷ்பு ரீட்வீட் செய்துள்ளதுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button