சென்னையில் குட்கா பறிமுதல் : 2 பேர் கைது!!
சென்னை அருகே 150 கிலோ குட்கா பறிமுதல். பீகாரை சேர்ந்த 2 பேர் கைது.
மடிப்பாக்கம் காவல்சழக எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் உதவி ஆணையர் ரூபன் ப்ராங்க உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையிலான போலீசார்மற்றும் உதவி ஆய்வாளர் திணேஷ. வாகன தனிக்கையில் ஆகியோர் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த ஏற்கனவே குட்கா விற்பனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பீகாரை சேர்ந்த சுனில்குமாரை மடிக்கி சோதனையிட்டதில் அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது தாழம்பூர் பகுதியில் வாடகை வீட்டில் வைத்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை தயாரித்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் குடோனிவ் பதுக்கிவைத்திருந்த 150 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த போலீசார் சச்சின்தாஸ்(21) என்பரையும் கைது செய்தனர்.
செய்திகள் : ரமேஷ், சோழிங்கநல்லூர்