தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாரதி இல்லத்திற்கு வருகை !!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வருகை தந்து பாரதி பிறந்த இல்லம் மற்றும் பாரதியார் நினைவு மணிமண்டபத்தில் மகாகவி பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டிசம்பர் 13ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவி பாரதியார் பிறந்த இல்லம் மற்றும் பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாரதியார் குறித்த போட்டோ ஆல்பங்களை பார்வையிட்டார்.
தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வருகையை முன்னிட்டு மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
செய்திகள் : மாரிராஜ், தூத்துக்குடி